விஜய் முடிவு: LCU படங்களின் நிலை என்ன?

By ஸ்டார்க்கர்

விஜய்யின் முடிவால் ‘எல்.சி.யூ’ படங்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’, ‘விக்ரம்’ மற்றும் ‘லியோ’ ஆகிய படங்களின் மூலம் உருவாக்கி இருப்பதுதான் ‘LCU’. LCU என்றால் Lokesh Cinematic Universe என்று அர்த்தம். இதில் தொடர்ச்சியாக ‘கைதி 2’, ‘விக்ரம் 2’ உள்ளிட்ட படங்களை இயக்க முடிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

தற்போது ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தினை முடித்துவிட்டு ‘கைதி 2’ படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார். இனி எல்.சி.யூ படங்களில் விஜய்யின் கதாபாத்திரமான லியோ இடம்பெறுமா என்பது தான் இப்போது அனைவருடைய கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால் ‘விஜய் 69’ படத்துக்குப் பிறகு முழுநேர அரசியலில் தீவிரம் காட்ட இருக்கிறார் விஜய்.

எல்.சி.யூ படங்களில் இறுதிப் படமாக ‘விக்ரம் 2’ இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் விஜய் இதில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். ஆனால், இப்போதைய சூழலில் விஜய் நடிக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.

இது குறித்து விசாரித்தபோது, எல்.சி.யூ படங்களில் விஜய்யின் வாய்ஸ் ஓவர் மட்டும் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. ‘லியோ’ படத்தில் கார்த்தியின் வாய்ஸ் ஓவர் எப்படி இடம்பெற்றதோ அப்படி இருக்கும். ஆனால், விஜய் நேரடியாக நடிக்க வாய்ப்பு குறைவு தான். இது தொடர்பாக இன்னும் விஜய் - லோகேஷ் கனகராஜ் சந்திப்பு நடைபெறவில்லை. அப்படி சந்திக்கும்போது விஜய் என்ன சொல்லப் போகிறார் என்பது தெரியவரும்” என்று தெரிவித்தார்கள்.

நேற்று (செப்.13) மாலை ‘விஜய் 69’ படக்குழுவினர் வீடியோ ஒன்றினை வெளியிட்டார்கள். அதில் ONE LAST TIME என்ற பெயரில் ஆரம்பிக்கும் வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது. இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE