சென்னை: சதீஷ் நாயகனாக நடித்துள்ள ‘சட்டம் என் கையில்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒருவித மர்மத்துடன் தொடங்குகிறது டீசர். கொலைகள் நடக்க அதற்கு யார் காரணம் என தெரியாமல் காவல் துறை அல்லல்படுகிறது. விசாரணை நடக்க, காவல்துறை வாகனத்தில் இருந்து வெளியே வருகிறார் சதீஷ். முகத்தில் ஒருவித பயத்தையும், வில்லத்தனத்தையும் கொண்டிருக்கும் அவர், காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்டிருக்கிறார். அடுத்தடுத்து சஸ்பென்ஸுடன் காட்சிகள் நகர்கின்றன. டீசரில் பின்னணி இசை கவனம் பெறுகிறது. காமெடியனாக தொடங்கிய சதீஷ், க்ரைம் த்ரில்லர் படத்தை தேர்வு செய்து நடித்திருப்பதை டீசர் உணர்த்துகிறது. விறுவிறுப்பாக நகரும் டீசர் படம் கொலையையும், அதன் காரணங்களையும் மையமாக வைத்து உருவாகியிருப்பதை உணர்த்துகிறது.
சட்டம் என் கையில்: ‘மெரினா’, ‘வாகை சுடவா’, ‘தாண்டவம்’, ‘எதிர்நீச்சல்’, ‘கத்தி’ உள்ளிட்ட பல்வேறு படங்களின் மூலம் கவனம் பெற்றவர் சதீஷ். ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்நிலையில் சதீஷ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் ‘சட்டம் என் கையில்’. இந்த படத்தில் சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'சிக்ஸர்' திரைப்படத்தை இயக்கிய சாச்சி இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீசர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
13 mins ago
சினிமா
34 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago