லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியுடன் நடிகை ராதிகா எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ராதிகா - விராட் கோலி இடையிலான சந்திப்பு லண்டனில் நடைபெற்றுள்ளது. லண்டனில் இருந்து சென்னை திரும்பும்போது விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்ததாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் இருப்பவர் விராட் கோலி. அவரது விளையாட்டு திறமையினால் நம்மைப் பெருமைப்பட வைத்தவர். லண்டனில் இருந்து சென்னை திரும்பும்போது இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அவருடன் பயணித்தது மிக்க மகிழ்ச்சி. செல்ஃபிக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி லண்டனில் இருந்து சென்னை வந்தடைந்தார். இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago