‘கூலி’ ஒப்புக் கொண்டதன் பின்னணி குறித்து உபேந்திரா விவரித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ரஜினியுடன் முதன் முறையாக நடித்துள்ளார் உபேந்திரா. கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் உபேந்திரா, ‘கூலி’ படத்தில் நடிக்க ஓப்புக் கொண்டது குறித்து பேசியிருக்கிறார்.
“சென்னையில் எனது படத்திற்கான இறுதிகட்டப் பணிகளில் இருந்தேன். அப்போது ஒரு இயக்குநர் என்னிடம் பேச வேண்டும் என்று மெசேஜ் வந்தது. உடனே அழைத்து பேசினேன்.
» தீ விபத்தில் காயமடைந்த குன்றக்குடி கோயில் யானை உயிரிழப்பு
» சென்னையில் நள்ளிரவில் மின் தடை ஏற்பட்டது ஏன்? - மின்சார வாரியம் விளக்கம்
லோகேஷ் கனகராஜ் என்னை நேரில் சந்தித்து கூலி படத்தின் கதை எப்படியிருக்கும் என்பதை மட்டுமே சொன்னார். இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம் என கூறிவிட்டேன். எனக்கு அவர் வரும் காட்சியில் பக்கத்தில் இருக்க வேண்டும், அது போதும் என்று தெரிவித்தேன். அவர் மீது பெரிய மரியாதை இருக்கிறது.
பணம் பெரிய விஷயம் அல்ல. ஒரே ஒரு பெயர் மட்டும் போதும், அது ரஜினிகாந்த். நான் அவருடைய பெரிய ரசிகன். அவருடைய படத்தில் யார் தான் நடிக்க முடியாது என்று கூறுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார் உபேந்திரா.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago