தனுஷ், நாகர்ஜுனாவின் ‘குபேரா’ -  கவனம் ஈர்க்கும் சிறப்பு போஸ்டர்!

By செய்திப்பிரிவு

சென்னை: தனுஷ் நடிக்கும் 51-வது படத்துக்கு ‘குபேரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தனுஷ் இயக்கி நடித்த 50-வது படமான ‘ராயன்’ அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து அவரது 51-வது படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் தெலுங்கில் வெளியான ‘ஃபிடா’ ‘லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பணம், நெருப்பு இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரில் தனுஷின் தோற்றம், நாகர்ஜுனாவின் புதிய லுக்கும் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE