“விஜய் மீதான அன்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு” - ‘தி கோட்’ குறித்து யுவன் நெகிழ்ச்சி 

By செய்திப்பிரிவு

சென்னை: “விஜய் மீதான என் அன்பை வெளிப்படுத்துவதற்கு தகுந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி” என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. விஜய் மீதான என் அன்பை வெளிப்படுத்துவதற்கு தகுந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. குறிப்பாக வெங்கட் பிரபு இல்லாமல் இது எதுவும் நடந்திருக்காது” என பதிவிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் இன்று (செப்.5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிநேகா, பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் இந்தியில் மட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

43 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்