லோகேஷ் - ரஜினியின் ‘கூலி’யில் உபேந்திராவின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு!

By செய்திப்பிரிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் கன்னட நடிகர் உபேந்திராவின் கதாப்பாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாப்பாத்திரங்களை போஸ்டர் மூலம் அறிமுகம் செய்து வருகிறது ‘கூலி’ படக்குழு.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக இணைந்து இதில் பணியாற்றி வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு பணியை கவனிக்கிறார்.

பான் இந்திய திரைப்படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிரதானமாக நடித்து வரும் நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதுவரை இந்தப் படத்தில் நடித்து வரும் சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகியோரது பாத்திரங்களை போஸ்டர் மூலம் அறிமுகம் செய்துள்ளது படக்குழு.

அந்த வகையில் தற்போது இந்தப் படத்தில் நடித்து வரும் உபேந்திராவின் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் அவர் ‘கலீஷா’ என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார். தனது கையில் மூடைகள் தூக்க உதவும் ஊக்கினை அவர் வைத்துள்ளார். அது தங்க நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்