விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ செப்டம்பர் 27-ல் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட்லர்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செந்தூர் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ ஆகிய படங்களை இயக்கிய தனா இயக்கியுள்ளார். இதில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விவேக் - மெர்வின் இசையமைக்கும் இப்படத்துக்கு நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE