சென்னை: இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’ படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பொன்ராம். அவர் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மறந்த நடிகர் விஜயகாந்துடன், ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சந்தன காற்று’ படங்களில் சரத்குமார் நடித்திருந்தது கவனிக்கத்தக்கது.
காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முன்னதாக, சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படைத் தலைவன்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago