“நடிகர் விஜய்யை தெரியும்!” - சென்னையில் மனு பாகர் ஜாலி பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: மகாபலிபுரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், முதல்வர் ஸ்டாலின் குறித்து தெரியாது என்று பதிலளித்த மனு பாகர், “நடிகர் விஜய்யை தெரியும்” என ஒலிம்பிக் பதக்க நாயகி மனு பாகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற 'வேலம்மாள்'ஸ் விஷன் ஃபார் ஒலிம்பிக் மெடல் 2032' நிகழ்வில் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க நாயகி மனு பாகர் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மனு பாகரிடம், மாணவி ஒருவர், “தமிழ்நாடு குறித்து நான் சில கேள்விகளைக் கேட்கிறேன். உங்களுக்கு அது குறித்து தெரியுமா என்பதைச் சொல்லுங்கள்” என்றார். மனு பாகர் அதற்கு ஒப்புக்கொண்டதும், “பொங்கல் சாப்பிட்டது உண்டா?” என கேட்டார். அதற்கு அவர், “நான் சாப்பிட்டுள்ளேன் என்று தான் நினைக்கிறேன். எனக்கு தென்னிந்திய உணவுகள் மிகவும் பிடிக்கும்” என்றார்.

“மகாபலிபுரம் குறித்து கேள்விப்பட்டுள்ளீர்களா?”, “எனக்கு அதுபற்றி பெரிய அளவில் தெரியாது” என்றார் மனு பாகர். “மீனாட்சி அம்மன் கோயில் தெரியுமா?”, “எங்கள் முதல்வர் ஸ்டாலினை கேள்விப்பட்டுள்ளீர்களா?” என கேட்ட கேள்விகளுக்கு சிரிப்புடன் நழுவினார்.

“செஸ் வீரர் பிரக்ஞானந்தா தெரியுமா?”, “கண்டிப்பாக தெரியும். அவரை நேரில் பார்த்திருக்கிறேன்” என்றார். இறுதியாக, “பிரபல நடிகர் விஜய் தெரியுமா?” என்ற கேட்டதற்கு, “தெரியும். அவர் டார்லிங்” என பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்