வாடகை பாக்கி விவகாரம்: வீட்டு உரிமையாளரிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் யுவன் சங்கர் ராஜா

By செய்திப்பிரிவு

சென்னை: வாடகை பாக்கி தரவில்லை என தன் மீது போலீஸில் புகார் அளித்த வீட்டு உரிமையாளருக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா குடியிருந்தார். இந்த வீட்டின் உரிமையாளரான ஃபஸீலத்துல் ஜமீலா என்பவர், திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரிடம் அளித்துள்ள புகாரில், தனது வீட்டில் குடியிருந்த யுவன் சங்கர் ராஜா ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும், தன்னிடம் சொல்லாமலேயே வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தன்னை பற்றிய அவதூறு பரப்பியதாக வீட்டின் உரிமையாளர் ஃபஸீலத்துல் ஜமீலாவுக்கு யுவன் சங்கர் ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், பல ஆண்டுகளாக பிரபலமான இசையமைப்பாளராக அறியப்படும் தன்னைப் பற்றி அவதூறாக தொலைகாட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் ஃபஸீலத்துல் ஜமீலா அளித்துள்ள பேட்டி தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே தனக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்