விஜய்யின் 69-வது படம்: உறுதி செய்தார் ஹெச்.வினோத்

By செய்திப்பிரிவு

விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படம், செப். 5-ம் தேதி வெளியாக உள்ளது. இதை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் 69-வது படத்தை ஹெச்.வினோத் இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாயின. இது விஜய்யின் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதற்கிடையே விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வினோத், அந்தப் படத்தை இயக்க இருப்பதை உறுதி செய்தார். அவர் கூறும்போது, “அது 200 சதவிகிதம் விஜய் படமாகவே இருக்கும். இந்தப் படத்துக்கு என்னை ஒப்பந்தம் செய்யும்போதே, ‘எல்லோரும் பார்க்கும் படமாக இருக்க வேண்டும்’ என்று விஜய் சொன்னார். அதனால் அரசியல் கட்சியையோ, அரசியல்வாதியையோ தாக்கும் படமாக இல்லாமல், 100 சதவிகிதம் கமர்ஷியல் படமாக இருக்கும்” என்றார். ‘தி கோட்’ பட ரிலீஸுக்கு பிறகு இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

44 mins ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்