சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று (ஆகஸ்ட் 15) வெளியானது. ரசிகர்களுடன் இணைந்து இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் பார்த்தார்.
அதன் பிறகு அவர் தெரிவித்தது. “தங்கலான் படம் வெளியாகி, பார்வையாளர்கள் மத்தியில் பாசிட்டிவ் ரிவ்யூஸை பெற்று வருகிறது. அது எனக்கு சந்தோஷம் தருகிறது. மக்கள் பலரும் பார்த்துவிட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தப் படம் நிச்சயம் எல்லோரிடத்திலும் சென்று சேரும் என நம்புகிறேன். எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
வித்தியாசமாக கதை சொல்ல வேண்டும் என நான் யோசிப்பது இல்லை. நான் சொல்ல வேண்டும் என்பதை எனது படைப்புகள் மூலம் சொல்கிறேன்” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்தார்.
ஸ்டுடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிராகாஷ்குமார் இசையமைப்பித்துள்ளார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago