விஜய்யின் ‘தி கோட்’ ட்ரெய்லர் ஆக.17-ல் வெளியீடு!

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் ட்ரெய்லர் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய்யின் 68-ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘விசில் போடு’, ‘சின்ன சின்ன கண்கள்’ ‘தி ஸ்பார்க்’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

குறிப்பாக, ‘தி ஸ்பார்க்’ பாடலில் இடம்பெற்றிருந்த விஜய்யின் தோற்றம் விமர்சனத்துக்கு உள்ளானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாவதால் ரசிகர்களுக்கு நிறைவை அளிக்கும் வகையில் படக்குழு ட்ரெய்லரை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ட்ரெய்லர் வரும் சனிக்கிழமை (ஆக.17) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்