நடிகர் சங்க பொதுக்குழு செப்.8-ல் கூடுகிறது

By செய்திப்பிரிவு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 8-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

சமீப காலமாகத் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் நடிகர் சங்கத்துக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஷால், தனுஷ் உட்பட சில நடிகர்களின் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் நவ.1-ம் தேதி முதல், சினிமா தொடர்பான அனைத்துப் பணிகளும் நடைபெறாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவுக்கு கண்டனத்தைத் தெரிவித்தது. தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் நடந்த நடிகர் சங்க செயற் குழுவில், தயாரிப்பாளர் சங்கத்துடன் பிரச்சினைகளைப் பேசி தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நாசர் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 8-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இதில், சினிமா பணிகளை நிறுத்துவது குறித்த தயாரிப்பாளர் சங்க முடிவு, நடிகர் சங்கக் கட்டிட விவகாரம், நட்சத்திர கலைவிழா நடத்தி நிதிதிரட்டுதல் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.ஒவ்வொரு பொதுக்குழுவிலும் மூத்த கலைஞர்களை கவுரவிப்பது வழக்கம். இப்போது நடிகர் டெல்லி கணேஷை கவுரவிக்க இருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்