பரபரக்கும் அஜித் 56 அப்டேட்ஸ்

By ஸ்கிரீனன்

கெளதம் மேனன் இயக்கி வரும் படத்தைத் தொடர்ந்து 'வீரம்' இயக்குநர் சிவா இயக்கவிருக்கும் படத்தின் பணிகள் படுஜோராக நடைபெற்று வருகின்றன.

அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை கெளதம் மேனன் இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் நடைபெறுவது போல வடிவமைத்து இருக்கிறார் கெளதம் மேனன். இதனால் சென்னையில் அண்ணா சாலை, ஈ.சி.ஆர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு படுதீவிரமாக நடைபெற்று வரும் சமயத்தில், அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பணிகள் மறுபுறம் படுஜோராக நடைபெற்று வருகிறது.

இது குறித்து அஜித் 56 படக்குழுவினரிடம் விசாரித்த போது, "இப்படத்தை தயாரிக்க பல்வேறு முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பி.வி.பி சினிமாஸ் தயாரிக்கக் கூடும்.

'வீரம்' படத்தை விட ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்று மிகவும் மெனக்கிட்டு வருகிறார் இயக்குநர் சிவா. அஜித்திடம் ஒரு வரிக்கதையைச் சொல்லி ஒ.கே வாங்கிவிட்டார் இயக்குநர். தற்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கெளதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், அஜித்திடம் திரைக்கதை அமைப்பைச் சொல்ல காத்திருக்கிறார் சிவா. கெளதம் படப்பிடிப்பு முடிந்து காலில் ஆபரேஷன் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார் அஜித். அதனைத் தொடர்ந்து இதன் படப்பிடிப்பு தொடங்கும்.

'வீரம்' போலவே இப்படத்திலும் நிறைய நடிகர், நடிகைகள் நடிக்கவிருக்கிறார்கள் என்பது மட்டுமே இப்போதைக்கு கூற முடியும்" என்றார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்