யுவன் இசையின் ‘ஸ்பார்க்’... விஜய்யின் ‘தி கோட்’ 3-வது சிங்கிள் எப்படி? 

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய்யின் ‘தி கோட்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாடலில் இடம்பெற்றுள்ள விஜய்யின் தோற்றம் குறித்த கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

3-வது சிங்கிள் எப்படி? - இந்தப் பாடலுக்கு ‘ஸ்பார்க்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. யுவன் இசையமைத்து பாடியுள்ளார். அவருடன் விருஷா பாலுவும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார். கங்கை அமரசன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பின்னணியில் ஒலிக்கும் ‘பீட்’ கவனம் பெறுகிறது. ஆங்காங்கே பாடலில் ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இசை ஒருவகையான ‘வைப்’பை தருகிறது. ஆனால் அதற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு வரிகள் அழுத்தமாக இருப்பதாக தெரியவில்லை. பாடகர்களின் குரல்கள் பலம் சேர்க்கிறது. குத்தாட்டம் போட வைக்கும் இசை யுவனின் மெனக்கெடலை வெளிப்படுத்துகிறது. இருப்பினும் லிரிக்கல் வீடியோவுக்கு நடுவே வரும் விஜய்யின் தோற்றம் அனிமேஷன் பொம்மைப் போல காட்சியளிக்கிறது.

தி கோட்: விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படம் செப்டம்பர் 5-ம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. பாடல் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE