நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஞானவேல் இயக்கியுள்ள இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்கிறார். இதில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ரஜினியின் மனைவியாக, நடித்துள்ளதாக மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “இது முழுக்க ரஜினிகாந்தின் படம். நான் அவர் மனைவியாக நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. நான் டப்பிங்கை ஆரம்பிக்கவில்லை. என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். இந்த வார்த்தையை கேட்கும்போது, தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன்.
என்னை இப்படி அழைப்பதால் தேவையற்ற விவாதங்கள், சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. இது போன்ற பட்டங்கள் எனக்குத் தேவையில்லை. பார்வையாளர்களின் அன்பு மட்டுமே போதும்” என்று மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago