‘காளி’ படத்தைப் பார்க்க நிறைய காரணங்கள் வேண்டாம்; இந்த ஒரு காரணம் மட்டும் போதும் எனத் தெரிவித்துள்ளார் கிருத்திகா உதயநிதி.
விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று ரிலீஸாகியுள்ள படம் ‘காளி’. கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இந்தப் படத்தில், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையும் அமைத்துள்ளார்.
‘இந்த 5 காரணங்களுக்காக மக்கள் தியேட்டருக்கு வந்து ‘காளி’ படத்தைப் பார்க்க வேண்டும் என்றால், என்னென்ன காரணங்களைச் சொல்வீர்கள்?’ என கிருத்திகாவிடம் ‘தி இந்து’வுக்காகக் கேட்டேன்.
“5 காரணங்கள் வேண்டாம்; ஒரு காரணம் மட்டும் போதும்னு நினைக்கிறேன். 2 மணி நேரம் 8 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை எண்டெர்டெயினிங்கா இருக்கும் என நம்புகிறேன். நான் ஒரு படம் பார்த்தால், அந்த கேரக்டர்ஸ் என்னுடன் பொருந்திப் போகும் வகையில் இருக்கும் என்று நினைப்பேன். அப்படி பொருந்திப் போனால்தான், என்னால் கதைக்குள் போக முடியும், படத்தை உணர்ந்துகொள்ள முடியும். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் ‘காளி’ படத்தை எடுத்திருக்கிறோம். அது ஒர்க் அவுட் ஆகியிருக்கும் என நம்புகிறேன்.
இன்னொரு விஷயம், ஒரு குடும்பப் படம் வந்து நீண்ட நாட்களாகி விட்டது. க்ரைம், த்ரில்லர், அடல்ட் போன்ற ஜானர் படங்களே அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. சிறுவர்களை அழைத்துப் போவது மாதிரியான படங்கள் வெளியாகி பலகாலம் ஆகிவிட்டது. எனவே, குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்து குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக ‘காளி’ இருக்கும்” என்றார் கிருத்திகா உதயநிதி.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...
“நான் நடிகன் கிடையாது; எனக்கு நடிக்கத் தெரியாது” - விஜய் ஆண்டனி விறுவிறு பேட்டி
என் படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள்: விஷால்
“அரசியல் பேசுபவர்கள் உடனே களத்துக்கு வந்துவிட வேண்டும்” - விஜய் ஆண்டனி
11 வருடங்களுக்குப் பிறகு படம் இயக்குகிறார் டி.ஆர்: நமிதாவிடம் பேச்சுவார்த்தை?
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago