சென்னை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஸ்வீட் ஹார்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘ஜோ’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ரியோ ராஜ். இவர் அடுத்து நடிக்கும் புதிய படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். மேலும் அவரே படத்துக்கு இசையமைக்கிறார். ‘ஸ்வீட் ஹார்ட்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்குகிறார். படத்தில் கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, ரெஞ்சி பணிக்கர், அருணாசலேஸ்வரன், துளசி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் சமகால காதல் கதையை தழுவி உருவாகிறது. இந்நிலையில் இப்படத்தின் அறிமுக புரொமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
புரொமோ எப்படி?: ரியோ ராஜிடம் இயக்குநர் ஸ்வினீத், படத்தின் கதையை சொல்ல அவரும் நன்றாக உள்ளது என்கிறார். தொடர்ந்து, ‘நாளைக்கு அறிவிப்புன்னு இப்போ வந்து சொல்ற எப்டி பண்ண முடியும்’ என ரியோ கேட்க, ‘யுவன் சொல்லிட்டாரு’ என்கிறார். ‘அவரே சொல்லிட்டாரா அப்போ பண்ணி தான் ஆகணும்’ என ரியோ சொல்ல, அடுத்தடுத்து போஸ்டர் டிசைனர் உள்ளிட்ட அனைவரிடமும் யுவன் சங்கர் ராஜா பெயரை வைத்தே வேலை வாங்கி விடுகின்றனர். இறுதியில் இந்த விஷயம் யுவனுக்கே தெரியாமல் இருக்க கலகலப்புடன் நகரும் வீடியோவில் க்ளாப் அடித்து அறிவிப்பை வெளியிடுகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago