தனுஷின் ‘ராயன்’ முதல் நாளில் ரூ.12 கோடி வசூல்!

By செய்திப்பிரிவு

சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.12 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது 50-வது படத்தை தனுஷே இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தில் பெற்றுள்ள அதீத வன்முறைக் காட்சிகள் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் முதல் நாளில் ரூ.12 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ரூ.80 முதல் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. > விமர்சனத்தை வாசிக்க: ராயன் Review: தனுஷின் ‘அசுர’ ஆக்‌ஷன் சம்பவம் தரும் தாக்கம் என்ன?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE