மீண்டும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கே அஜித் கால்ஷீட் கொடுத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.
‘விசுவாசம்’ படத்தின் ஷூட்டிங், கடந்த 7-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது. இந்தப் படத்துக்காக அங்கு மிகப்பெரிய செட் போடப்பட்டுள்ளது. முதன்முதலில் பாடல்களைப் படமாக்கி வருகின்றனர். கடந்த சில படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த அஜித், இந்தப் படத்தில் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார்.
‘விசுவாசம்’ படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் ஜி.தியாகராஜன் தயாரித்து வருகிறார். அஜித் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘விவேகம்’ படத்தையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தான் தயாரித்தது. அந்தப் படம் நஷ்டமானதால், தன்னுடைய அடுத்த படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை அந்த நிறுவனத்துக்கே வழங்கினார் அஜித்.
இந்நிலையில், அதற்கடுத்த படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கே அஜித் வழங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை ‘விக்ரம் வேதா’ புஷ்கர் - காயத்ரி அல்லது ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒருவரைத் தனக்குப் பிடித்துவிட்டால், அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை வழங்குவது அஜித்தின் வழக்கம். அப்படித்தான் தொடர்ந்து நான்காவது முறையாக தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை சிவாவுக்கு வழங்கினார் அஜித். அதேபாணியை தயாரிப்பு நிறுவனத்திலும் தற்போது கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளார் அஜித்.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...
விஷாலின் அடுத்த படம் ‘அயோக்யா’
“டெஸ்ட் வெச்சுதான் என்னையும் செலக்ட் பண்ணார் விஜய் ஆண்டனி” - கிருத்திகா உதயநிதி
‘செம போத ஆகாதே’ படத்தின் Sneak Peek
கீர்த்தி உருவில் அம்மாவை பார்த்தேன்!: சாவித்ரி மகள் விஜய சாமுண்டீஸ்வரி நெகிழ்ச்சி
'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் 'உயிர் உருவாத' பாடல் வீடியோ
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago