பிரசாந்த் நீலின் ‘கேஜிஎஃப்’ யூனிவர்ஸில் நடிகர் அஜித்?

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பிரசாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 3’-ல் அஜித் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அஜர்பைஜான் ஷெட்யூல் அண்மையில் நிறைவடைந்தது. அதே நேரம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் அஜித் நடித்துள்ளார். இந்தப் படத்தை முடித்து இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் அஜித் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகர் அஜித் - இயக்குநர் பிரசாந்த் நீல் சந்திப்பு அண்மையில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பில் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் 2 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன்படி ‘ஏகே65’ மற்றும் ‘ஏகே66’ ஆகிய இரண்டு படங்களை பிரசாந்த் நீல் இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ‘சலார் 2’ முடிந்த கையோடு ‘கேஜிஎஃப் 3’ படத்துக்கு திரும்புகிறார் பிரசாந்த் நீல். இந்தப் படத்தில் அஜித் இடம்பெறுவதன் மூலம் ‘கேஜிஎஃப்’ யூனிவர்ஸில் நுழைவார் என தெரிகிறது. மேலும் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்