‘துன்பங்கள் ஓடி போச்சே’ -  விஜய் வெளியிட்ட பிரசாந்தின் ‘அந்தகன்’ பாடல் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘அந்தகன் ஆன்தம்’ பாடலை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.

பாடல் எப்படி?: சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். இரண்டு இடத்தில் விஜய் சேதுபதியின் குரல் வந்து செல்கிறது. பாடல் வரிகளை உமா தேவி, ஏகாதசி எழுதியுள்ளனர். ஒருவகையான மோடிவேஷன் பாடலாக எளிமையான வரிகளால் உருவாகியுள்ளது. சில இடங்களில் மெட்டைத் தாண்டி வரிகள் ஒலிப்பது போன்ற உணர்வு எழுகிறது. அனிருத் குரலுக்கு ஏற்ற பிரசாந்தின் நடனம் கவனிக்க வைக்கிறது.

அந்தகன்: இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார்.

நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். இதில் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடல் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

மேலும்