சென்னை: இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ‘மின்மினி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?: படம் அழுத்தமான காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியிருப்பதை மொத்த ட்ரெய்லரும் உணர்த்துகிறது. பெரும்பாலும் பயணம் தொடர்பாகவே காட்சிகள் நகர்கின்றன. காதலர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், பிரிவையும் உணர்த்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மலைப்பகுதியில் விரியும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. “யாரு தான் இருளுக்கு அப்றம் தெரியுற வெளிச்சத்த விரும்பமாட்டாங்க”, “இயற்கையால மட்டும் தான் நம்ம வலிய போக்க முடியும்; இயற்கை கிட்ட சரணடைஞ்சா அது நம்மல பாத்துக்கும்”, “நான் மாற்றத்த நம்புறேன்” போன்ற வசனங்கள் சிறப்பு. மொத்த ட்ரெய்லரும் ஒருவகையான அமைதியை பிரதிபலிக்கிறது. படம் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்மினி: ‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவரது ‘மின்மினி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதை என்பதால், 2015-ம் ஆண்டு குழந்தைப் பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை படமாக்கிவிட்டார்.
இதையடுத்து அந்த கதாபாத்திரங்கள் இளம் பருவத்தை அடையும் வரை அதாவது 7 ஆண்டுகள் காத்திருந்து, அவர்களின் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டு வரும் வகையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினார். அவரின் இந்த முயற்சி திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்தது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
‘மின்மினி’ படத்தில் எஸ்தர் அனில் (பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்தவர்), பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘இது தனது கனவு திரைப்படம்’ என ஹலிதா ஷமீம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். ‘மின்மினி’ படத்தினை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ‘அங்கர் பாய் ஸ்டூடியோஸ்’ (Anchor Bay Studios) நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
22 mins ago
சினிமா
54 mins ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago