இது, தமிழ் சினிமா தலையெழுத்தை மாற்றுகிற படம் இல்லை! இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்: நேர்காணல்

By ஜெ.சரவணன்

‘போதையே ஆகாது. அப்போ செம போதை ஆனா, என்ன ஆகும்? அப்படி செம போதையில் இருக்கும் போது எடுக்கும் முடிவுகள் என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்பதுதான் படம்” என்று உற்சாகமாகப் பேசுகிறார் ’செம போத ஆகாதே’ திரைப் படத்தின் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.

‘செம போத ஆகாதே’ யாருக் கான படம்?

தலைப்பைப் பார்த்தாலே தெரியும். இது முழுக்கவும் இளைஞர் களுக்கான படம். தமிழ் சினிமா தலையெழுத்தை மாற்றுகிற படமோ, சிந்திக்க வைக்கிற கருத்துப் படமோ இல்லை. த்ரில்லர், ஆக்‌ஷன், காமெடி, லவ் அண்ட் லஸ்ட்ன்னு அனைத்தும் கலந்த பாப்கார்ன் என்டர்டெயின்மென்ட் இது. இளமையா உணர்கிறவர்கள் என்ஜாய் பண்ண லாம்.”

உங்கள் முதல் படம் ‘பானா காத்தாடி’ வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. இந்தப் படத்தில் என்ன புதுசா இருக்கு?

சென்னை ஐ.டி பசங்களோட வாழ்க்கையைப் பின்னணியாக வைத்துதான் திரைக்கதை இருக்கும். பெரும்பாலான ஆண்களின் வாழ்க்கையில எங்கேயாவது ஒரு சபலம் தட்டும். பெரும்பாலும் நாம் அந்த சபலத்தில் விழுந்துவிடாமல் நம்மை காப்பாத்திப்போம். நாம் வளர்ந்த கலாச்சாரம் அப்படி. ஆனாலும், போதையில் அப்படி ஒரு சபலத்தில் விழுந்துவிட்ட ஒருத்தனுக்கு என்னவெல்லாம் நடக்குது என்பதுதான் கதை. அந் தக் கதையை எவ்வளவு நகைச் சுவையா, த்ரில்லிங்கா சொல்ல முடியுமோ சொல்லியிருக்கோம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது எல்லோருக்கும் நல்லவேளை, நாம் அப்படி எதுவும் செய்யவில்லை என்கிற உணர்வு வரும். ராதாகிருஷ்ணன் திரைக்கதை எழுதியிருக்காரு. நிச்சயம் பேசப் படுவார்.

படத்தில் அதர்வா லுக் வித்தியாசமா இருக்கே?

இந்தப் படத்துக்கு முதல் தடவை டிஸ்கஷனில் உட்கார்ந்த போது அதர்வா தாடியில் அழகா இருந்தாரு. இதையே படத்துக்கு யூஸ் பண்ணிக்கலாமேன்னு முடிவு பண்ணிட்டோம். கதைக்கு இந்த லுக் கச்சிதமாப் பொருந்தி இருக்கு.

இப்படத்தில் அதர்வா தயாரிப்பாளர் ஆகியிருக்கிறாரே?

வேறொரு தயாரிப்பாளர் இந் தப் படத்தை எடுப்பதாக இருந்தது. பிறகு, அதர்வாவுக்கு இந்தக் கதை ரொம்ப பிடித்திருந்ததால் நானே தயாரிக்கிறேன் என்றார். தயாரிப்பாளராகணும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டிருந்தவருக்கு இப்படம் அமைந்துவிட்டது.

இந்தப் படத்தில் ஹீரோயின் களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கீங்க?

இரண்டு ஹீரோயின். மிஷ்டி சக்ர போர்த்தி, அனேகா சோதி. மிஷ்டி இந்தியில் இயக்குநர் சுபாஷ் கையின் ‘காஞ்சி’ படத்தில் அறிமுகமானவர். நல்லா நடிச்சிருக்காங்க. அனேகா ‘காவியத்தலைவன்’ படத்தில் ‘ஏ மிஸ்டர் மைனர் என்ன பாக்கற’னு கிறங்க வெச்சவங்க. இப்படத்தில் கால் கேர்ளா நடிச்சிருக்காங்க. படம் முழுக்க அவங்களுக்குக் கேரக் டர் இருக்கு. இந்தப் படத்தில் அவங்க கேரக்டர் நல்லாப் பேசப்படும்.

இப்போது பெரும்பாலும் டபுள் மீனிங் காமெடி படமாகவே வருகிறதே?

டபுள் மீனிங்லாம் இல்ல. எல்லாமே நேரடி அர்த்தம்தான். நாம் அதை மறைச்சு மறைச்சு பேசுவதால் அது இரட்டை அர்த்தம் மாதிரி தெரிகிறது. நல்ல படங்கள் வரும், அதைக் கொண்டாடுவோம். இந்த மாதிரி படங்களை சும்மா என்ஜாய் செஞ்சுட்டு போய்ட்டே இருக்கணும்.

தமிழ் சினிமா பற்றி இயக்குந ராக உங்கள் பார்வை என்ன?

வாழ்க்கை முழுக்க ஒரே மாதிரி தான் ஒரு இயக்குநர் படம் எடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தான் இயக்குநர்கள் தங்கள் படங்களை உருவாக்கியிருக்கிறார்கள். என்னோட முதல் குறும்படம் தேசிய விருது வாங்கியது. 20-க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அப்போது சினிமா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இங்கே வந்து பார்த்தால் சினிமா என்பதற்கு வரையறையெல்லாம் எது வும் இல்லை. ரசிகர் களுக்கு என்ன தேவையானதோ அதை மட் டும் அவர்கள் எதிர்பார்க்கிற விதத்தில் கொடுக்க வேண்டும் என்பது புரிந்தது.

 

இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...

“விஜய், சூர்யா, விஜய் சேதுபதியிடம் இந்தக் கேள்வியைக் கேட்பீர்களா?” - அமலாபால் காட்டம்

முதல் பார்வை: ‘நடிகையர் திலகம்’

நயன்தாராவுக்காகப் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்

முதல் பார்வை: இரும்புத்திரை

“இரும்புத்திரை, 2018-ம் ஆண்டின் தனி ஒருவன்” - இயக்குநர் ஸ்ரீகணேஷ் பாராட்டு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்