சென்னை: நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தம்பியும், நடிகருமான கார்த்தி நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கினாலும், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சமூகத்தில் அளவில்லா அன்பை பரப்பிவரும் ரசிகர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.
சூர்யாவை பொறுத்தவரை அவரது ‘கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தொடர்ந்து அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 44-வது படத்தில் நடித்து வருகிறார். இது தொடர்பான கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தொடர்ந்து அவர் தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் அவர் தயாரித்துள்ள கார்த்தியின் ’மெய்யழகன்’ செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago