சென்னை: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சூர்யா 44’ படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் அறிமுக வீடியோ ஒன்றை முதல் ஷாட் வீடியோ என்ற பெயரில் படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. கிளாப் அடித்து தொடங்கும் அந்த வீடியோவில் ஒரு குட்டி சுவரில் அமர்ந்திருக்கும் சூர்யா, 80களின் வில்லன் போல பெரிய மீசையும், ஃபங்க் ஹேர்ஸ்டைலும் வைத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று (ஜூலை 23) சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சூர்யா 44’ படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு பழைய கட்டிடத்தின் வெளியே ஆட்கள் சிலர் வரிசையாக நின்றிருக்க, திரையில் ஒரு காதல், ஒரு சிரிப்பு, ஒரு யுத்தம் என்ற வரிகள் வருகின்றன. தொடர்ந்து கருப்பு நிற உடையில், ரத்தம் தோய்ந்த முகத்துடன் வெளியே வரும் சூர்யா, அருகில் இருக்கும் நபரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி லோட் செய்து திரையை நோக்கி சுடுகிறார்.
‘சூர்யா 44’ முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் கேங்க்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என்பதை இந்த கிளிம்ப்ஸ் உறுதி செய்கிறது. எனினும் படத்தின் டைட்டிலை இன்னும் படக்குழு வெளியிடவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago