அஜித்தின் ‘விடாமுயற்சி’ - அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவு!

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளது. இது குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வரும் படம் விடாமுயற்சி. லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கியது.

இதனிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் இணைந்தார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த சூழலில் கடந்த மாதம் அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியது. இதில் கிளைமாக்ஸ் உட்பட முக்கிய காட்சிகள் படம் ஆக்கப்பட்டதாக தகவல்.

சுமார் 30 நாட்களுக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் நடிகர் அஜித் உட்பட படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE