சென்னை: அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அஜித் - த்ரிஷா சிரித்தபடி இருக்கும் இந்தப் போஸ்டர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் அஜித்குமார் ‘துணிவு’ படத்துக்குப் பிறகு நடித்து வரும் படம், ‘விடாமுயற்சி’. மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இடையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட்பேட் அக்லி’ படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டார். அந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்து விட்டதை அடுத்து ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சமீபத்தில் தொடங்கியது.
இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. அந்த போஸ்டர் வடிவமைப்பு மிகவும் ‘சிம்பிளாக’ இருந்ததாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
» பா.ரஞ்சித் - விக்ரமின் ‘தங்கலான்’ ஆகஸ்ட் 15-ல் ரிலீஸ்
» திகில் காட்சிகளின் நடுவே ‘குபீர்’ காமெடி - 'Stree 2' ட்ரெய்லர் எப்படி?
போஸ்டர் எப்படி? - இன்று வெளியாகியுள்ள போஸ்டரை பொறுத்தவரை அஜித் இளமையாக காட்சியளிக்கிறார். கண்ணாடி அணிந்து நின்றுகொண்டு அவர் சிரிக்க, அருகில் த்ரிஷாவும் புன்னகைக்கிறார். இதுவரை வெளியான போஸ்டரிகளிலேயே இந்தப் போஸ்டர் ரசிகர்களால் வரவேற்பு பெற்றிருக்கிறது. அஜித் - த்ரிஷா காம்போ ரசிக்க வைக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago