சென்னை: ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடிக்கும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி, 2017-ல் வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கினார். தற்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்துக்கு ‘கடைசி உலகப் போர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், படத்தில் நாயகனாக நடிப்பதுடன் இசையும் அமைத்துள்ளார். அத்துடன் படத்தை ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் என்ற தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல் தோற்றம் ஆதியின் புகைப்படத்துடன், துப்பாக்கி, பீரங்கிகள், குண்டுவெடிப்பு என போர்க்களத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக, அண்மையில் வெளியான ஹிப்ஹாப் ஆதியின் ‘பிடி சார்’ திரைப்படம் ரசிகர்களிடையே பரவலான கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
» தனுஷ் பிறந்தநாளை ஒட்டி ஜூலை 26-ல் ‘புதுப்பேட்டை’ ரீரிலீஸ்!
» “திமுகவுக்குத்தான் வாக்களித்தேன். ஆனால்…” - ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து பா.ரஞ்சித்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago