சென்னை: சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அத்துடன் பல பிரிவுகளில் தேசிய விருதையும் பெற்றது. இந்தக் கூட்டணியில் மீண்டும் இணைந்ததாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. சுதா கொங்கரா - சூர்யா இணையும் புதிய படத்தை 2டி நிறுவனம் தயாரிப்பதாகவும், இதற்கு ‘புறநானூறு’ என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், கால்ஷீட் உள்ளிட்ட சிக்கலால் சூர்யா படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யாவுக்கு பதிலாக இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல 2டி நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகுவதாகவும், அதற்கு பதிலாக புதிய தயாரிப்பாளர் படத்தை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அவரது நடிப்பில் அடுத்து ‘அமரன்’ திரைப்படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் ‘புறநானூறு’ படத்தில் இணைவார் என தெரிகிறது.
» படப்பிடிப்பில் ஸ்டன்ட் கலைஞர் உயிரிழப்பு: ‘சர்தார் 2’ படக்குழு இரங்கல்
» 12 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட கமலின் ‘இந்தியன் 2’ - அதிகாரபூர்வ அறிவிப்பு
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago