ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு உள்ளிட்டோர் நடித்த படம் ‘அந்தாதூன்’. 2018ல் வெளியான இப்படம் அந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக மாறியது. விறுவிறுப்பான திரைக்கதையும், எதிர்பாராத திருப்பங்களும் இப்படத்துக்கு ரிப்பீட் ஆடியன்ஸை வரவழைத்து மிகப்பெரிய வெற்றியை தந்தது.
‘அந்தாதூன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன். படத்தை அவரது ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். அவருடன் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நீண்ட காலமாக வெளியீட்டுக்கு காத்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை ஒருவழியாக படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - ‘அந்தாதூன்’ படத்தின் பலமே ஒரு நொடி கூட தொய்வடையாத அதன் ஜெட் வேக திரைக்கதையும், நடிகர்களின் பிசிறில்லாத நடிப்பும்தான். இதுவரை தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் செய்யப்பட்ட ரீமேக்குகள் பெரிய வரவேற்பை பெறவில்லை. காரணம் ‘அந்தாதூன்’ படத்தில் இருந்த ஆன்மா அப்படங்களில் மிஸ் ஆனதுதான். ‘அந்தகன்’ ட்ரெய்லரில் ஒரிஜினல் படத்தின் கரு சிதையாமல் இருப்பதாகவே தெரிகிறது.
காட்சிகளின் துணுக்குகளின் மூலம் லைட்டிங், நடிப்பு, ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை அசலை அப்படியே பிரதிபலித்திருப்பதாகவே தோன்றுகிறது. இதுவே இப்படம் பாதி கிணறை தாண்டியதற்கு சமம்தான். படத்தின் கதையோட்டம் ஆடியன்ஸுக்கு அசல் கொடுத்த அதே தாக்கத்தை ஏற்படுத்திவிட்டால் ‘அந்தகன்’ சூப்பர்ஹிட் ஆவது உறுதி. ‘அந்தகன்’ ட்ரெய்லர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago