‘முதல் படத்தின் ரிலீஸுக்குப் பிறகுதான் திருமணம் என்பதில் உறுதியாக இருந்தேன்’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
கெளதம் கார்த்திக், சனா மக்புல் நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸான படம் ‘ரங்கூன்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவருக்கு, இணை இயக்குநரான ஜஸ்வினிக்கும் வருகிற 25-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. வாழ்த்துகள் சொல்வதற்காக ராஜ்குமாருக்கு போன் செய்தேன்.
“ரொம்ப ரொம்ப நன்றி ப்ரதர். கடந்த 9 வருடங்களாகவே அவரை எனக்குத் தெரியும். விஜய் டிவியில் 2009-ம் ஆண்டு ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ நிகழ்ச்சியை இயக்கியபோது, அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து இன்டர்ன்ஷிப்புக்காக வந்திருந்தார். அப்போதில் இருந்தே எனக்குத் தெரியும். நீண்ட வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். பிறகு, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் அசோஸியேட்டாகப் பணியாற்றினார். அதன்பின்னர், என்னுடன் ‘ரங்கூன்’ படத்தில் கோ டைரக்டராகப் பணியாற்றினார்.
திருமணம் செய்துகொள்ளச் சொல்லி, சில வருடங்களாக என்னுடைய வீட்டில் பிரஷர் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால், முதல் படம் வெளியான பிறகுதான் திருமணம் என்பதில் உறுதியாக இருந்தேன். முதல் படம் பண்றதுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும்? வாய்ப்பு கிடைத்து, அது படமாக முடிந்து, ரிலீஸ் ஆகவேண்டும். அதுவரைக்கும் மனம் சொந்த வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்க்காது. அப்படித்தான் நானும் இருந்தேன். இப்போது நேரம் கூடிவந்துவிட்டது.
இத்தனை வருடங்கள் நண்பர்களாக இருப்பதால், என்னுடைய கனவுகள் மட்டுமின்றி, என்னுடைய நிறை, குறைகள் அனைத்தும் ஜஸ்வினிக்குத் தெரியும். அதேபோல், அவருடைய கனவு என்னவென்று எனக்குத் தெரியும். தெரியாத ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு, அவருக்கு நம் கனவுகளைப் புரிய வைப்பதைவிட, தெரிந்தவர்கள் ஒன்று சேர்ந்துவிடலாமே என இருவரும் பேசி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம். அதனால், இதைக் காதல் திருமணம் என்று சொல்வதா இல்லை நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று சொல்வதா? எனத் தெரியவில்லை” என்று சிரிக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...
தனுஷின் ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’
‘அர்ஜுன் ரெட்டி’ இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர்
முதல் பார்வை: ‘நடிகையர் திலகம்’
“விஜய், சூர்யா, விஜய் சேதுபதியிடம் இந்தக் கேள்வியைக் கேட்பீர்களா?” - அமலாபால் காட்டம்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago