நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு

By செய்திப்பிரிவு

நடிகர் அஜித்தை அஜர்பைஜானில் வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு சந்தித்துள்ளார்.

நடிகர் அஜித் குமாரின் முக்கியமான வெற்றிப் படம் ‘மங்காத்தா’. 2011 ஆகஸ்ட் 31 அன்று வெளியான ‘மங்காத்தா’ அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல் பொதுவான வெகுஜன சினிமா ரசிகர்களையும் பெரிதும் திருப்திப்படுத்தி பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற திரைப்படம். இயக்குநர் வெங்கட் பிரபுவின் திரை வாழ்விலும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது ‘மங்காத்தா’.

இந்தப் படத்துக்கு பின் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக அறியப்படுகிறார். தற்போது வெங்கட் பிரபு நடிகர் விஜய்யை வைத்து ‘தி கோட்’ படத்தை இயக்கி வருகிறார். அதேநேரம் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. விடாமுயற்சி தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது.

இதற்கிடையேதான் அஜர்பைஜானில் வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் அஜித்தை சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வெங்கட் பிரபு, “கடைசியாக இது நடந்துவிட்டது. ப்ரொமன்ஸ்” என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் அப்புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இருவரும் மீண்டும் இணைந்து படத்தில் பணியாற்ற வேண்டும் என கருத்து கூறிவருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்