சுசீந்திரன் இயக்கும் ‘2K லவ் ஸ்டோரி’ பட பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் புதிய படமான ‘2K லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் படப் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘குற்றம் குற்றமே’. ஜெய் நடித்திருந்த இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுசீந்திரன் படம் எதுவும் இயக்கவில்லை. இந்நிலையில் சுசீந்திரன் அடுத்ததாக இயக்கும் புதிய படத்துக்கு ‘2K லவ் ஸ்டோரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் இப்படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கின.

2K தலைமுறையின் காதல், நட்பு என அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாக உள்ளது. மேலும், வெட்டிங் போட்டோகிராபி எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் சென்னையில் நடைபெற உள்ளது.

படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். சுசீந்திரன் - இமான் இணையும் 10-வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. புதுமுக நடிகர்கள் ஜெகவீர், மீனாட்சி ஆகியோர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE