‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படம் சொல்வது என்ன?

By செய்திப்பிரிவு

‘பிக் பாஸ்’ சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம், ‘பன் பட்டர் ஜாம்’. இதை ராகவ் மிர்தாத் இயக்குகிறார். ஆத்யா பிரசாத், பாவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். ரெய்ன் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்றம் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நாயகன் ராஜு ஜெயமோகன் கூறும்போது, “ சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி மேற்கொண்ட போது பலரும் பல ஆலோசனைகள் கூறி அதிலேயே ஒரு வருடத்துக்கு மேல் போய்விட்டது. பிறகு நம்மிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு நடித்த படம்தான் இந்த ‘பன் பட்டர் ஜாம்’. இந்தப் படம் பெண்களுக்கு பிடித்த படமாக இருக்கும்”என்றார்.

இயக்குநர் ராகவ் மிர்தாத் கூறும்போது, “வாழ்க்கையில் பலர் கடந்தகாலத்தை சுமந்து கொண்டே நிகழ்காலத்தை வாழ தவறி விடுகின்றனர். அப்படி இல்லாமல் அந்த கணத்தை அப்போதே வாழ்ந்து விடுவதுநல்லது என்பதைத்தான் இந்த படம் சொல்கிறது. இந்தப் படத்தில், ஒரு கருத்தை உருவகமாக சொல்வதற்கு ஓர் உணவுப் பொருள்தேவைப்பட்டது. அதனால் பன் பட்டர் ஜாமை தேர்வு செய்தோம். படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE