விக்ரமின் ‘தங்கலான்’ ட்ரெய்லர் புதன்கிழமை வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் ட்ரெய்லர் புதன்கிழமை (ஜூலை 10) வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. கடைசியாக ஜூன் 20-ம்தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 10-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ட்ரெய்லரில் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் அடுத்ததாக ‘சித்தா’ இயக்குநர் அருண் குமாருடன் இணைந்து ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE