சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’படத்தின் ‘ராயன் ரம்பிள்’ (Raayan Rumble) பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிவு பாடியுள்ள இந்த ராப் வகையறாப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாடல் எப்படி? - “ரூட்டு இது ரூட்டு வைக்க போறான் வேட்டு” என தொடங்கும் இந்தப் பாடலை அறிவு எழுதி பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘ராவான ’கேங்ஸ்டர் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளதை உணர முடிகிறது. கிட்டத்தட்ட ராயனின் எழுச்சியாக இப்பாடல் இருக்கும் என தெரிகிறது. ராப் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலின் ஸ்பீடு பீட் கவர்கிறது. “ரகள ரகள ராயா” போன்ற வரிகளின்போது ஒலிக்கும் பின்னணி இசை உத்வேகம் கூட்டுகிறது. “ராங்கானவர்க்கெல்லாம் தீங்கானவன்” போன்ற வரிகள் கவனம் பெறுகிறது.
ராயன்: தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடல் லிரிக்கல் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago