வரலட்சுமி சரத்குமார் திருமண வரவேற்பு: முதல்வர் ஸ்டாலின், பிரபலங்கள் நேரில் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் - நிக்கோலாய் தம்பதிகளின் திருமண வரவேற்பு நிகழ்வு புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘தாரை தப்பட்டை’, ‘விக்ரம் வேதா’, ‘சண்ட கோழி 2’, ‘சர்கார்’, ‘மாரி 2’, ‘இரவின் நிழல்’ படங்களின் மூலம் கவனம் பெற்றார். கடைசியாக தெலுங்கில் வெளியான ‘ஹனுமான்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராயன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுக்கும் கடந்த மார்ச் மாதம் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து அவர்களின் திருமணம் சென்னையில் இன்று (ஜூலை 3) காலை நடைபெற்றது. தொடர்ந்து மாலை திருமண வரவேற்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர். அதேபோல பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

11 mins ago

சினிமா

19 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்