பிக் பாஸ் ராஜு நாயகனாக அறிமுகமாகும் ‘பன் பட்டர் ஜாம்’

By செய்திப்பிரிவு

பிக் பாஸ் ராஜு கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘பன் பட்டர் ஜாம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இயக்குகிறார். ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடிக்கின்றனர். ரெய்ன் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார். பாபு குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

“நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதைதான் படம். ஒருவனைச் சுற்றி எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், அந்தந்த கணத்தை முழுமையாக வாழப் பழகினால், கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற கருத்தை நகைச்சுவை ததும்பச் சொல்கிறோம். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது” என்கிறது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

விளையாட்டு

45 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்