மோசமான நிலையில் தமிழ் சினிமாவின் வசூல்: தயாரிப்பாளர் டி.சிவா வருத்தம்

By செய்திப்பிரிவு

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்'. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்கள் டி.சிவா, தனஞ்செயன் இயக்குநர் சசி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் விஜய் மில்டன் பேசும்போது, "இந்தப் படம் மூலம் விஜய் ஆண்டனியுடன் நெருக்கமாக பழக வாய்ப்பு கிடைத்தது. 'கருடன்', 'மகாராஜா' என சமீபகாலத்தில் தமிழ் சினிமா நல்ல படங்களைக் கொடுத்து வருகிறது. இந்தப் படமும் அந்த வரிசையில் சேரும்" என்றார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது, "படங்களின் வசூலை பொருத்தவரை, தமிழ் சினிமா மோசமான நிலையில் உள்ளது. படங்களை விமர்சிப்பவர்கள், பார்வையாளர்களை திரையரங்குகளுக்கே வராதீர்கள் என்றோ, தரம் தாழ்ந்தோ தயவு செய்து விமர்சனம் செய்யாதீர்கள். இது தாழ்மையான வேண்டுகோள். இந்தப் படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனி தலைக்கனம் இல்லாத மனிதர். அவருடைய கடின உழைப்புக்கு இந்தப் படம் வெற்றி பெறும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

39 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்