ரஜினியின் ‘வேட்டையன்’ உடன் மோதும் சூர்யாவின் ‘கங்குவா’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினியின் ‘வேட்டையன்’ படமும் அதே நாளில் வெளியாகிறது.

சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நடிகர் ரஜினி நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கி வரும் ‘வேட்டையன்’ திரைப்படம், ‘கங்குவா’ வெளியாகும் அதே நாளில் வெளியாக உள்ளது. ஆகவே, ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.

சூர்யாவின் முந்தைய படமான ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கியவர் த.செ.ஞானவேல். ரஜினிக்கு ‘ஜெயிலர்’ முன் வெளியான ‘அண்ணாத்த’ படத்தை இயக்கியவர் சிறுத்தை சிவா என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்