சென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. இது தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘தி லெஜண்ட்’. இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன், விவேக், நாசர், சுமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். துரை செந்தில்குமாரை பொறுத்தவரை, அவர் இயக்கத்தில் சூரி, சசிகுமார் நடிப்பில் அண்மையில் வெளியான ‘கருடன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.50 கோடி வசூலைக் கடந்தது.
இந்நிலையில், லெஜண்ட் சரவணன் - துரை செந்தில்குமார் இணையும் புதிய படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன. இது தொடர்பான புகைப்படங்களை இயக்குநர் துரை செந்தில்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
» பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தோர் பட்டியலிட்டு நடிகர் விஜய் நன்றி!
» பவதாரிணியின் குரலில் ‘தி கோட்’ பாடல்: ஏஐ மூலம் சாத்தியமானது எப்படி?
படத்தில் லெஜண்ட் சரவணனின் தோற்றம் குறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. தாடி வைத்துக்கொண்டு ‘டெரர்’ லுக்கில் அசத்துக்கிறார். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago