பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தோர் பட்டியலிட்டு நடிகர் விஜய் நன்றி!

By செய்திப்பிரிவு

சென்னை: தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: “எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும்‌, சமூக ஊடகத்‌ தளங்கள்‌ வாயிலாகவும்‌ வாழ்த்துகளைத்‌ தெரிவித்த அனைவருக்கும்‌ என்னுடைய மனமார்ந்த நன்றியைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

குறிப்பாக புதுச்சேரி முதல்வர் என்‌.ரங்கசாமி, தமிழகத்தின்‌ முன்னாள்‌ முதல்வரும், எதிர்க்கட்சித்‌ தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, தமிழகத்தின்‌ முன்னாள்‌ முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்‌, தெலங்கானா மற்றும்‌ புதுச்சேரியின்‌ முன்னாள்‌ ஆளுநர்‌ தமிழிசை செளந்தரராஜன்‌,

நாம்‌ தமிழர்‌ கட்சித்‌ தலைமை ஒருங்கிணைப்பாளர்‌‌ சீமான்‌, விடுதலைச்‌ சிறுத்தைகள்‌ கட்சித்‌ தலைவர்‌ தொல்‌.திருமாவளவன்‌, பாட்டாளி மக்கள்‌ கட்சித்‌ தலைவர்‌ அன்புமணி ராமதாஸ்‌, அம்மா மக்கள்‌ முன்னேற்றக்‌ கழகப்‌ பொதுச்‌ செயலாளர்‌ டி.டி.வி.தினகரன்‌, மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சித்‌ தலைவர்‌ கமல்ஹாசன்‌, தமிழக மக்கள்‌ முன்னேற்றக்‌ கழகத்‌ தலைவர்‌ ஜான்‌ பாண்டியன்‌, எஸ்‌.டி.பி.ஐ. கட்சித்‌ தலைவர்‌ நெல்லை முபாரக்‌, சட்டமன்ற உறுப்பினரும்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டித்‌ தலைவருமான செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித்‌ தலைவர்‌ கே.அண்ணாமலை,

முன்னாள்‌ அமைச்சரும்‌ முன்னாள்‌ நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்‌.திருநாவுக்கரசர்‌, முன்னாள்‌ அமைச்சர்‌ டி.ஜெயக்குமார்‌, முன்னாள்‌ அமைச்சர்‌, சட்டமன்ற உறுப்பினர்‌, எஸ்‌.பி.வேலுமணி, முன்னாள்‌ அமைச்சர்‌, சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ வானதி சீனிவாசன்‌, நாடாளுமன்ற உறுப்பினர்‌ விஜய்‌ வசந்த்‌,

சட்டமன்ற உறுப்பினர்‌, தாரகை கத்பட்‌, முன்னாள்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌, ஒ.பி.ரவீந்திரநாத்‌ மற்றும்‌ என்றும்‌ எனது நெஞ்சிற்கினிய கலைத்துறை சார்ந்த அனைத்து ஆளுமைகள்‌, வழிகாட்டிகள்‌, நண்பர்கள்‌, சகோதர சகோதரிகள்‌, ஊடக நிறுவனங்கள்‌, தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ அனைத்து நிர்வாகிகள்‌, என்‌ நெஞ்சில்‌ குடியிருக்கும்‌ கட்சித்‌ தோழர்கள்‌, உலகெங்கும்‌ உள்ள என்‌ உயிரினும்‌ மேலான கோடானு கோடி சொந்தங்கள்‌, பொதுமக்கள்‌ என அனைவருக்கும்‌ எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்‌” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்