‘கோட்’ 2050-ல் நடக்கும் கதையா?

By செய்திப்பிரிவு

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம், ‘கோட்’ (தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்). இதில் மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விஜய்யின் 50-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதை ‘டிகோடிங்’ (decoding) செய்துள்ள நெட்டிசன்கள், டைம் டிராவல் பின்னணியை கொண்ட இந்தப் படத்தின் கதை 2050-ல் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதற்கு ஆதாரமாக வீடியோவின் ஓரிடத்தில், ‘பீக் ஆப் 11 பில்லியன் பை 2050’ என்று எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை குறிப்பிடுகின்றனர். மாஸ்கோவில் நடக்கும் சேஸிங் காட்சிகள், தந்தை மகன் என 2 விஜய்யும் பைக்கில் பரபரப்பாகச் செல்வது, ஓட்டலில் நடக்கும் ஸ்டன்ட் காட்சி என 50 நொடி கிளிம்ஸ் வீடியோ ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. இந்தப் படம் செப்.5-ல் வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

க்ரைம்

21 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

25 mins ago

சினிமா

31 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்