விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ 6 நாட்களில் ரூ.55 கோடி வசூல்!

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மகாராஜா’ திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.55.8 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ள படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரைத் தவிர்த்து, நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த என்கேஜிங்கான திரைக்கதையில் பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படம் வெளியாகி 6 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.55.8 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய் சேதுபதி நாயகனாக நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில், தற்போது இந்தப் படம் அவரது ‘கம்பேக்’ஆக அமைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்