புதுச்சேரி: கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பின்போது ஸ்டன்ட் காட்சி ஒன்றில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் கொச்சியில் ஓய்வு எடுத்து வருகிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் த்ரிஷா, சிம்பு, அபிராமி, அசோக் செல்வன், இந்தி நடிகர் அலிஃபஸல், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசன், நாசர், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் ஹெலிகாப்டரிலிருந்து குதிக்க வேண்டிய காட்சியின்போது துரதிஷ்டவசமாக ஜோஜூ ஜார்ஜ் இடறிவிழுந்து அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து 2 வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கொச்சி சென்றுள்ள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஓய்வில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜோஜூ ஜார்ஜ் கையில் ஸ்டிக் வைத்து நடந்து வரும் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago