சென்னை: “என் சகோதரி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது நான் ஸ்டூடியோவில் வேலைப்பார்த்து கொண்டிருந்தேன். என்னால் அந்த நேரத்தில் அங்கு போகமுடியவில்லை” என தனது வேலைபளு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த பேட்டியில், “என்னுடைய சகோதரி கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். அப்போது ஒரு ப்ராஜெக்டை விரைவில் முடிக்க வேண்டி ஸ்டூடியோவில் வேலைப்பார்த்துகொண்டிருந்தேன். அதற்கான டெட்லைன் நெருங்கிவிட்டதால் அங்கே இருந்தேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பொருளாதார நெருக்கடியில் இருந்ததால் அந்த வேலையை தள்ளிப்போட முடியவில்லை.
அன்றைக்கும் மாலை 5 மணிக்குள் அந்தப் பாடலை முடித்தாக வேண்டிய கட்டாயம். என் சகோதரியின் உடல்நிலை குறித்து தெரிவிக்க என்னுடைய அம்மா அடிக்கடி ஃபோன் செய்துகொண்டிருந்தார். ஆனால், அவரிடம் பேச எனக்கு போதிய நேரமில்லை. சில மணி நேரத்திலேயே வேலையை முடிக்க வேண்டியிருந்ததால் அக்காவைச் சென்று பார்க்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக, என்னால் சரியான நேரத்தில் வேலையை முடிக்க முடிந்தது. கடவுளுக்கு நன்றி, நான் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர் உடல்நிலை தேறியிருந்தார்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago