ஆக்‌ஷன் விஜய் சேதுபதி, அசால்ட் அனுராக் காஷ்யப் - ‘மகாராஜா’ ரிலீஸ் ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’ படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் ட்ரெய்லரை ஷேர் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள ‘மகாராஜா’ படத்தை ’குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - மொத்த ட்ரெய்லரிலுமே ‘லக்‌ஷ்மி கேஸ கண்டுபிடிச்சு கொடுங்க’ என கேட்டுக் கொண்டேயிருக்கிறார் விஜய் சேதுபதி. அது என்ன வழக்கு என்பது குறித்து பார்வையாளர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்துள்ளனர். நட்டி போலீஸ் கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். “ஒருத்தன் லட்சத்துல லஞ்சம் கொடுக்குறான்னா, கோடியில எதையோ பதுக்குறான்னு அர்த்தம்” என்ற வசனம் கவனம் பெறுகிறது.

அனுராக் காஷ்யப்பின் தெனாவட்டு உடல்மொழி ஈர்க்கிறது. எளிய மனிதராக காட்சிப்படுத்தபட்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு ஆக்‌ஷன் காட்சிகளும் உண்டு என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. குறிப்பாக, இறுதியில் ஆக்ரோஷத்துடன் வெடிக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் கவர்கிறார். லைட்டிங், பின்னணி இசை வலுசேர்க்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்